வட கர்நாடகத்தில் இன்று கடும் வெயில்: இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் வட கர்நாடகத்தின் 14 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை

மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் வட கர்நாடகத்தின் 14 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை கடுமையான கோடைவெயில் இருக்கும் என்று கர்நாடக மாநில இயற்கைபேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
வட கர்நாடகத்தில் வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியசாக உயர்ந்து காணப்படுகிறது. இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருகைதந்து வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
கலபுர்கியில் திங்கள்கிழமை அதிகப்பட்சமாக 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்பவெப்பம் காணப்படுகிறது. விஜயபுராவில் 40டிகிரி செல்சியஸ், கொப்பள், ராய்ச்சூரு, பெல்லாரியில் தலா 40டிகிரி செல்சியஸ் வெப்பம் காணப்பட்டது. இது மாநிலத்தில் அதிகப்படியான வெப்பநிலையாகும். வடகர்நாடகத்தில் வறட்சியான வெப்பநிலை காணப்படுவதாக இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. எனவே, வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் கட்டாயமாக குடை பிடித்துசெல்லுமாறும், தாகத்தைத் தணிக்க பாட்டில்களில் குடிநீர் எடுத்துச்செல்லுமாறு கர்நாடகமாநில இயற்கைபேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து மைய இயக்குநர் சீனிவாஸ்ரெட்டி கூறியது:-
ஹைதராபாத்-கர்நாடகப் பகுதியில் திங்கள்கிழமை வெப்பநிலை 41 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமையும் இதே வெப்பநிலை காணப்படும். நண்பகல் 12.30மணி முதல் மாலை 3 மணி அளவில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, வாக்காளர்கள் நண்பகல் 12.30மணிக்கு முன்பாக, மாலை 3 மணிக்கு பின்பு வாக்களிக்க செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். வழக்கமான ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த முறைவெப்பத்தின் அளவு 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. வடகர்நாடகத்தில் தற்போது கோடைமழைக்கு வாய்ப்பில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com