இளநிலை தொழில்நுட்ப பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

இளநிலை தொழில்நுட்பப் பள்ளியில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இளநிலை தொழில்நுட்பப் பள்ளியில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில் பெல்லாரி, பாகல்கோட், பத்ராவதி, கலபுர்கி, மங்களூரு, ஹுப்பள்ளியில் அரசு இளநிலை தொழில்நுட்பப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 2019-20-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். கர்நாடக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 1 முதல் 7-ஆம் வகுப்பு வரையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். 7-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பள்ளிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே 25-ஆம் தேதி வரை பெறமுடியும். 
நிறைவு செய்த விண்ணப்பப் படிவங்களை மே 25-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அளிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய பள்ளி முதல்வரை சந்தித்து பேசலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com