கிரிக்கெட்: சின்னசாமி மைதானம் அருகே வாகனங்கள் நிறுத்தத் தடை

20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே புதன்கிழமை(ஏப்.24) வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர்.


20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதையொட்டி, சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே புதன்கிழமை(ஏப்.24) வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு  மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ், பஞ்சாப் லெவன் அணிகளுக்கிடையே 20 ஓவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. கிரிக்கெட் போட்டி நடை பெறும் சின்னசாமி மைதானத்தின் அருகே புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 11.30 மணிவரை வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர். 
கிரிக்கெட் மைதானம் அருகே உள்ள குயின்ஸ்சாலை, எம்.ஜி.சாலை, கும்பளே சதுக்கம், கப்பன்சாலை, ராஜ்பவன்சாலை, செளடய்யாசாலை, ரேஸ்கோர்ஸ்சாலை, மியூசியம்சாலை, கஸ்தூரிபா சாலை, ஹட்சன் சதுக்கம், கப்பன்பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கிரிக்கெட்டை காண வரும் ரசிகர்கள் மைதானத்துக்குள் சிகரெட், தீப்பெட்டி, திண்பண்டங்கள், தண்ணீர்பாட்டில், பட்டாசு, டார்ச், கேமரா, மடிக்கணினி, கைப்பைகள், ஆயுதங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானத்தின் அருகே அதிக அளவில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
கிரிக்கெட்டை போட்டியை காணவரும் ரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் தங்கள் வீடுகளுக்கு எளிதாக செல்லும் வகையில் சின்னசாமி மைதானத்திலிருந்து நகரின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவையும் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com