வீட்டில் புகுந்து தங்கநகை திருட்டு
By DIN | Published On : 27th April 2019 05:14 AM | Last Updated : 27th April 2019 05:14 AM | அ+அ அ- |

பூட்டை உடைத்து வீட்டில் புகுந்து ரூ. 1.90 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெங்களூரு நந்தினிலேஅவுட் 8-வது பிரதானசாலை, 4-வது பிளாக்கை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் வியாழக்கிழமை காலை வீட்டைப்பூட்டிக் கொண்டு பணிக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த யாரோ, ரூ. 1.90 லட்சம் மதிப்புள்ள 65 கிராம் தங்கநகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து நந்தினி லேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.