கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு திமுகவினருக்கு அழைப்பு

சென்னையில் புதன்கிழமை ( ஆகஸ்ட் 7) நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் திமுகவினர்

சென்னையில் புதன்கிழமை ( ஆகஸ்ட் 7) நடைபெறும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் திமுகவினர் பங்கேற்க வேண்டும் என்று கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி கேட்டுகொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,  சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில்  அவரது உருவச் சிலை ஆகஸ்ட் 7-இல் திறக்கப்படுகிறது.
விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகிக்கிறார். மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைக்கிறார். முன்னதாக, அன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா சாலையில் இருந்து அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை மெளன ஊர்வலம் நடைபெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்வர்நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
இந்த நிகழ்வுகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த திமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
இதைத் தொடர்ந்து, பெங்களூரில் அமைந்துள்ள திமுக தலைமை அலுவலகத்தில் கருணாநிதியின் சிலை திறக்கப்படவிருக்கிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com