Enable Javscript for better performance
திரைப்படவியல் பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திரைப்படவியல் பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

    By DIN  |   Published on : 06th August 2019 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் பட்டயப் படிப்புகளில்(டிப்ளமோ)சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019?-20-ஆம் கல்வியாண்டில் கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு மானியம்பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
    இதில் கர்நாடகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களும், வெளிமாநில மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகிறது. இப்படிப்பில் சேர்ந்து படிக்க, கர்நாடகத்தில் ஐந்து ஆண்டுகள் பயின்ற எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 
    விண்ணப்பங்கள் மற்றும் விவர கையேட்டை www.dte.kar.nic.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை முதல்வர் அலுவலகம், அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், ஹெசரகட்டா அஞ்சல், பெங்களூரு-560088 என்ற முகவரியில் அல்லது அருகாமையில் உள்ள ஆவண சரிபார்ப்பு மையங்களில் நேரில் அளிக்கலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களின் நகல்கள், 8 கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 080-28466768, 28446672 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai