சுடச்சுட

  

  "சாக்லெட் விற்பனை வருவாயை ஏழை மாணவர்களுக்கு வழங்க முடிவு'

  By DIN  |   Published on : 14th August 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திர தினத்தையொட்டி சாக்லெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ திட்டமிட்டுள்ளதாக ஐடிசி உணவுப் பிரிவின் மூத்த செயல் அதிகாரி அனுஜ் ருஷ்தகி தெரிவித்தார்.
   பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசிய அளவில் இமயமலை, அமர்நாத் உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளிலிருந்து சுவைத் தரக்கூடிய முக்கியப் பொருள்களைக் கொண்டு 73 கிலோ எடையுள்ள சாக்லெட்டை தயாரித்துள்ளோம். இந்த சாக்லெட்டை சிறுதுண்டுகளாக்கி, தேசிய அளவில் சுதந்திர தினத்தையொட்டி விற்பனை செய்ய உள்ளோம்.
   விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை, மேக் ஏ விஷ் அறக்கட்டளை மூலம், ஏழை மாணவர்களில் கல்விக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு சாக்லெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையை 40 மாணவர்களின் கல்விக்கும், கல்வி உபகரணங்கள் வாங்க வழங்கினோம். நிகழாண்டு அதிக அளவில் மாணவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம் என்றார்.
   பேட்டியின் போது, மேக் ஏ விஷ் அறக்கட்டளையின் நிர்வாகி தீபக்பாட்டியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai