"கனிம சத்துகள் நிறைந்த குடிநீரைப் பருகுவது அவசியம்'

உடல்நலத்தை பாதுகாக்க கனிம சத்துகள் உள்ள தண்ணீரை பருகுவது அவசியம் என்று கோமின் குழுமத்தின் மேலாண் இயக்குநர் ரவீந்திர சங்கேஷ்வர் தெரிவித்தார்.

உடல்நலத்தை பாதுகாக்க கனிம சத்துகள் உள்ள தண்ணீரை பருகுவது அவசியம் என்று கோமின் குழுமத்தின் மேலாண் இயக்குநர் ரவீந்திர சங்கேஷ்வர் தெரிவித்தார்.
 பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இயற்கையான குடிநீர் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியது:
 தூய குடிநீர் வழங்கும் கருவிகளால், கனிம சத்துக்கள் உள்ள குடிநீர் கொடுக்க முடியாது. தண்ணீர் சுத்தப்படுத்தும் கருவிகளால், நல்ல கனிமசத்து, தீய கிருமிகள் உள்ளிட்ட அனைத்தையும் அழித்துவிட்டு, தூய குடிநீரை மட்டுமே வழங்க முடியும். இதனால் கனிமச்சத்து இல்லாமல் நீண்டநாள்களுக்கு பிறகு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் 22 இடங்களில் மட்டுமே அரசின் அளவுகோளின் படி கனிமசத்து நிறைந்த குடிநீர் கிடைக்கிறது என்றார். நிகழ்ச்சியில் அக்குழுமத்தின் இயக்குநர் விஜய்மானே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com