சுடச்சுட

  

  மழைக்கு மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பள்ளி வாகனம் சேதமடைந்தது.
  தென்கன்னட மாவட்டம், மங்களூரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை காலை தனியாருக்கு சொந்தமான பள்ளி வாகனம் 17 மாணவர்களுடன், மங்களூரு நந்தூர் சதுக்கம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 66 இல் சென்று கொண்டிருந்தது. 
  அப்போது, எதிர்பாராதவிதமாக மழைக்கு சாலையோரமிருந்த மரம் வேரோடு சாய்ந்து பள்ளி வாகனம், எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி மீது சாய்ந்தது. இதனால் பள்ளி வாகனம் சேதமடைந்தது. வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த மாணவர்கள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்த போலீஸார், பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai