குடகு, தென்கன்னட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

குடகு, தென்கன்னட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குடகு, தென்கன்னட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வட கர்நாடகம், கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அண்மையில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையால் 58 பேர் உயிரிழந்துள்ளனர். 4.30 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 
இந்த நிலையில் திங்கள்கிழமை முதல் கர்நாடகத்தின் 17 மாவட்டங்களில் மழை குறைந்து, வெள்ள பாதிப்பும் குறைந்திருந்த நிலையில், புதன்கிழமை மாலை முதல் குடகு, தென்கன்னட, சிக்மகளூரு, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து குடகு, தென்கன்னட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் குடகு, தென்கன்னட, சிக்மகளூரு, பெங்களூரு உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாளுக்கு தொடர்ந்து பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் குடகு, தென்கன்னட, சிக்மகளூரு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
பெங்களூரில் புதன்கிழமை பெய்த மழையால் கிரிநகர் பகுதியில் 2 மரங்கள் விழுந்ததில் 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. மெஜஸ்டிக், சாந்திநகர், எம்.ஜி.சாலை, ஜெயநகர், கிரிநகர், கே.ஆர்.சந்தை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com