பெங்களூரிலிருந்து செல்லும் ரயில்கள் நிறுத்தம்

கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் பெங்களூரிலிருந்து ஜெய்ப்பூர், மங்களூரு, கார்வார்

கர்நாடகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் பெங்களூரிலிருந்து ஜெய்ப்பூர், மங்களூரு, கார்வார் செல்லும் ரயில்கள் குறிப்பிட்ட நாள்களில் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆக.15-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்: ரயில் எண்-82653-பெங்களூரு (யஷ்வந்தபுரம்)-ஜெய்ப்பூர் விரைவு ரயில், ஹோகா-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) விரைவு ரயில் (19568), ஜோத்பூர்-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) விரைவு ரயில் (16507).
ரயில் எண்-14806-பர்மெர்-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) விரைவு ரயில், ரயில் எண்-16515-பெங்களூரு (யஷ்வந்தபுரம்)-கார்வார் விரைவு ரயில் ஆக. 16, 19, 21, 23-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.  ரயில் எண்கள்-16511-கார்வார்-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) விரைவு ரயில், ஆக. 15, 17, 20, 22-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்கள்-16511/16513-பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையம்-கண்ணூர்/கார்வார் விரைவு ரயில், ஆக. 15, 16, 17, 21, 22-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
ரயில் எண்கள்-16517/16523-பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையம்-கண்ணூர்/கார்வார் விரைவுரயில், ஆக. 18, 19, 20-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்கள்-16512/16514-கண்ணூர்/கார்வார்-பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையம் வரையிலான விரைவு ரயில் ஆக. 18, 19, 20,    21-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
ரயில் எண்கள்-16518/16524-கண்ணூர்/கார்வார்-பெங்களூரு ?கே.எஸ்.ஆர் ரயில் நிலையம் வரையிலான விரைவு ரயில் ஆக. 15, 16, 17, 22-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்-16575-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) மங்களூரு சந்திப்பு விரைவு ரயில், ஆக. 15, 20, 22-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண்-16576-மங்களூரு சந்திப்பு-பெங்களூரு (யஷ்வந்தபுரம்)விரைவுரயில், ஆக. 16, 19, 21, 23-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்-16585-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) மங்களூரு சந்திப்பு விரைவுரயில், ஆக. 15, 18, 20, 22-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்-16586-?மங்களூரு சந்திப்பு-பெங்களூரு (யஷ்வந்தபுரம்) விரைவு ரயில், ஆக. 16, 19, 21, 23-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com