வெள்ள நிவாரணப் பணிகளில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் பங்கேற்க வேண்டும்: முதல்வர் எடியூரப்பா

வெள்ள நிவாரணப் பணிகளில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.

வெள்ள நிவாரணப் பணிகளில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு குமாரகுருபா அரசு இல்லம் கிருஷ்ணாவில், பெங்களூரு மாநகர வளர்ச்சி குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: 
மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணப் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நிவாரணப் பணியில் அரசுடன் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் பங்கேற்க வேண்டும். அத்துடன் தங்களுக்கு வேண்டிய தொழில் அதிபர்களிடம் நிவாரண நிதியைப் பெற்றுத் தரவும் முன்வர வேண்டும்.
மேலும், பெங்களூரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டமாக பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் என்றார்.
கூட்டத்தில் மைசூரு தசரா திருவிழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், பெங்களூரின் குப்பை பிரச்னை, மாநகராட்சி பட்ஜெட் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் சதானந்த கெளடா, மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, வி.சோமண்ணா, அஸ்வத் நாராயணா, எம்.கிருஷ்ணப்பா, எஸ்.ஆர்.விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com