"அந்நியச் செலாவணியில் வெளிப்படையான சேவை'
By DIN | Published On : 23rd August 2019 08:46 AM | Last Updated : 23rd August 2019 08:46 AM | அ+அ அ- |

அந்நியச் செலாவணியில் வெளிப்படையான சேவை செய்ய முடிவு செய்துள்ளதாக புக்மைபோரக்ஸ்.காம் நிறுவனரும், செயல் அதிகாரியுமான சுதர்ஷன் மோத்வாணி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அந்நியச் செலாவணியில் வெளிப்படையான சேவையை செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு யெஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்.
இருவரும் இணைந்து விசா நெட்வொர்க்கில் போராக்ஸ் அட்டையை அறிமுகம் செய்துள்ளோம். இது வேலை, வியாபாரத்துக்காக வெளி நாடுகளுக்கு செல்லும் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.