Enable Javscript for better performance
அரசு தொழில் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை- Dinamani

சுடச்சுட

    

    அரசு தொழில் பயிற்சி மையத்தில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    இதுகுறித்து பெங்களூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு, ஒசூர் சாலையில் உள்ள அரசு மாதிரி தொழில் பயிற்சி மையத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடக்கவிருக்கிறது. கணினி நிரல் உதவியாளர், டிரெஸ் மேக்கிங், வெல்டர், டிராட்ஸ்மேன் சிவில், டிராட்ஸ்மேன் மெக்கேனிக், தகவல்தொடர்புதொழில்நுட்பம்-பராமரிப்பு,டூல் அண்ட் டைமேக்கர்(ஜிக்ஸ் அண்ட் ஃபிக்ஷர்ஸ்), டர்னர் பாடப் பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.
    ஓராண்டு பயிற்சிக்கு ரூ.1500, ஈராண்டு பயிற்சிக்கு ரூ.1750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
    இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. ஆக.21 முதல் 28?ஆம் தேதிவரை விண்ணப்பங்களை  ஜ்ஜ்ஜ்.ங்ம்ல்ற்ழ்ஞ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் செலுத்தலாம். ஆக.29,30ஆம் தேதிகளில் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான மாணவர் பட்டியல் வெளியிடப்படும். இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய 080 - 26562307 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai