Enable Javscript for better performance
தேய்பிறை அஷ்டமி பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி அருகே அதியமான்கோட்டை காலபைரவர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தக்ஷண காசி காலபைரவர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலை 6 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனகார்ஜுன, குபேர யாகங்கள் நடைபெற்றன. இதையடுத்து, காலபைரவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, 64 வகை அபிஷேகம், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், நான்கு வேதபாராயணம் சிறப்பு உபசார பூஜைகள் செய்யப்பட்டன.
    இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பைரவரை வழிபட்டனர். மேலும், பக்தர்கள் திருக்கோயில் பிரகாரத்தை வலம் வந்தும், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றியும் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களின் வருகையையொட்டி, அதியமான்கோட்டை போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai