"கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்'

கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று சித்ரகலாபரிஷத்தின் தலைவர் பி.எல்.சங்கர் கேட்டுக் கொண்டார்.

கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று சித்ரகலாபரிஷத்தின் தலைவர் பி.எல்.சங்கர் கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் வெள்ளிக்கிழமை கைவினைப்பொருள் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: 
கைவினைபொருள்களை உருவாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில், கைவினைப் பொருள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப். 1-ஆம் தேதிவரை நடைபெறும் கண்காட்சியில் தேசிய அளவிலான கலைஞர்கள் உருவாக்கியுள்ள கைவினைப்பொருள் இடம்பெற்றுள்ளன.
தேசிய அளவில் மட்டுமின்றி மாநிலத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கதர் ஆடைகள், அலங்காரபொருள்கள், கைத்தறி சேலைகள், ஜவுளிகள், பருத்திசேலைகள், மரவேலைபாடுகள், செருப்புகள், ஆபரணங்கள், பொம்மைகள், தரைவிரிப்புகள், புல் கால்மிதியடிகள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொருள்களில் கலைஞர்களின் கைவினை வேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கும் அதே நேரத்தில் நமது கலாசாரத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன என்றார்.  நிகழ்ச்சியில் முன்னாள் மாநில அழகி ஷோபா ஸ்ரீராம், செயலாளர் கமலாக்ஷி உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com