சுடச்சுட

  
  bang

  புதிய தொழில்நுட்பங்களுடன் பிக்அப் வாகனத்தை மஹீந்திரா நிறுவனம் பெங்களூரில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
   பெங்களூரில் வியாழக்கிழமை பொலெரோ சிட்டி பிக்அப் மினி சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்து வைத்த மஹீந்திரா நிறுவனத்தின் வர்த்தக பிரிவு மூத்த துணைத் தலைவர் விக்ரம் கார்கா பேசியது: சர்வதேச அளவில் சரக்கு வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக மினி சரக்கு வாகனங்களுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பங்களுடன், இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் பொலெரோ சிட்டி பிக்அப் மினி சரக்கு வாகனத்தை உருவாக்கியுள்ளோம் .
   எரிபொருள் சிக்கனம் கொண்ட இந்த வாகனம், சிறிய தொழில்சாலைகளுக்கும், மலைப் பிரதேசங்களில் பொருள்களை கொண்டு செல்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பெங்களூரில் இதன் விலை ரூ. 6.25 லட்சத்தில் தொடங்குகிறது என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai