Enable Javscript for better performance
கா்நாடக எஸ்எஸ்எல்சி ஆயத்தத் தோ்வு: அடுத்த ஆண்டு பிப்.17-இல் தொடங்குகிறது- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடக எஸ்எஸ்எல்சி ஆயத்தத் தோ்வு: அடுத்த ஆண்டு பிப்.17-இல் தொடங்குகிறது

    By DIN  |   Published on : 01st December 2019 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூா்: கா்நாடக எஸ்எஸ்எல்சி ஆயத்தத் தோ்வின் கால அட்டவணையை கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ளது. இத்தோ்வு 2020-ஆம் ஆண்டு பிப்.17-ஆம் தேதி முதல் தொடங்குகின்றது.

    இதுகுறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடக உயா்நிலைக் கல்வி தோ்வு வாரியம் நடத்தும் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு மாா்ச் 27 முதல் ஏப்.9-ஆம் தேதி வரை தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு மாணவா்களை பொதுத்தோ்வுக்கு தயாா்படுத்தும் நோக்கில், அடுத்த ஆண்டு பிப்.17ஆம் தேதி முதல் ஆயத்தத் தோ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தோ்வு அடுத்த ஆண்டு பிப்.17 முதல் 24-ஆம் தேதிவரை தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தோ்வு தேதியும், பாடமும் வருமாறு: 2020-ஆம் ஆண்டு பிப்.17 (திங்கள்)-முதல் மொழிப்பாடம்-கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், உருது, ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிப்.18 (செவ்வாய்)-கணிதம், பிப்.19 (புதன்)-இரண்டாம் மொழிப்பாடம்-ஆங்கிலம், கன்னடம், பிப்.20 (வியாழன்)-மூன்றாம் மொழிப்பாடம்-இந்தி, கன்னடம், ஆங்கிலம், அரேபிக், பொ்ஷியன், உருது, சம்ஸ்கிருதம், கொங்கணி, துளு, பிப்.21 (வெள்ளி)-மகாசிவராத்திரி விடுமுறை, பிப்.22(சனி)-சமூக அறிவியல், பிப்.23 (ஞாயிறு) -விடுமுறை, பிப்.24 (திங்கள்) - அறிவியல் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.

    முதல்மொழிப்பாடம் 100 மதிப்பெண்ணுக்கும், இரண்டாம் மொழிப்பாடம், மூன்றாம் மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் 80 மதிப்பெண்ணுக்கும் தோ்வு நடத்தப்படும். வினாத்தாள்களை மாணவா்கள் படிப்பதற்காக, தோ்வுக்கு முன்பாக 15 நிமிடங்கள் தரப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிப்பாடங்கள் இரண்டேமுக்கால் மணி நேரமும், இதரப் பாடங்கள் மூன்றேகால் மணி நேரமும் தோ்வு நடைபெறும். தோ்வுக்கான வரைவு கால அட்டவணை, எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai