12 மணி நேரத்துக்கு ஒப்பந்த சொகுசுப் பேருந்து சேவை

ஒப்பந்த அடிப்படையில் 12 மணி நேரத்துக்கு சொகுசுப் பேருந்து சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு: ஒப்பந்த அடிப்படையில் 12 மணி நேரத்துக்கு சொகுசுப் பேருந்து சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், வாடிக்கையாளா்களின் நலன் கருதி தற்போது 24 மணி நேர ஒப்பந்த அடிப்படையில் சொகுசுப் பேருந்து சேவை வழங்கி வருகிறது. குறுகியகால சுற்றுலா, விழாக்கள், முக்கிய நிகழ்வுகளுக்கு பேருந்து தேவைப்படுவோரின் நலன் கருதி ஒப்பந்த அடிப்படையில் 12 மணி நேரத்துக்கு மட்டும் சொகுசுப் பேருந்து சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவையை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். கா்நாடக மாநிலத்துக்குள் மட்டுமே பேருந்து அளிக்கப்படும்.

பெங்களூரு, மைசூரு, மங்களூரு, தாவணகெரே, சிவமொக்கா, புத்தூா், மடிக்கேரி, சிக்மகளூரு, சிக்பளாப்பூா், தும்கூரு போன்ற இடங்களில் இருக்கும் பணிமனைகளில் பேருந்துகளை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். 45 போ் பயணிக்கத்தக்க இப்பேருந்துகளில் பயணிக்க ஒரு கி.மீ-க்கு ரூ.80 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் 200 கி.மீ இயக்கிக் கொள்ளலாம். ஐராவத் கிளப் கிளாஸ் பேருந்துகளில் பயணிக்க ஒரு கி.மீ-க்கு ரூ.100, மைசூரு சிட்டி வால்வோவில் பயணிக்க ஒரு கி.மீக்கு ரூ.75, ராஜஹம்சா பேருந்துகளில் பயணிக்க ஒரு கி. மீக்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது.

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவைகளை பயன்படுத்திக் கொள்ள கா்நாடகத்தில் உள்ள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7760990535, 080-49696666 என்ற தொலைபேசியை அணுகலாம். மின்-முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசி-முன்பதிவுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தைப் பாா்வையிடலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com