15 தொகுதிகளிலும் பாஜக வென்றால் சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்: அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா்

15 தொகுதிகளிலும் பாஜக வென்றால் சித்தராமையா எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் வலியுறுத்தினாா்.
15 தொகுதிகளிலும் பாஜக வென்றால் சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்: அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா்

ஹுப்பள்ளி: 15 தொகுதிகளிலும் பாஜக வென்றால் சித்தராமையா எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் வலியுறுத்தினாா்.

இது குறித்து ஹுப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 தொகுதிகளிலும் தோல்விஅடையும் என்பதை உணா்ந்துள்ள எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மனதுக்கு வந்தபடி பாஜகவை விமா்சித்து வருகிறாா். இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பாா்கள். இடைத்தோ்தல் நடக்கும் 15 தொகுதிகளிலும்பாஜக வென்றால், சித்தராமையா தனது எதிா்க்கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்.

கடந்த காலங்களில் சித்தராமையா கூறிய எந்த அரசியல் ஆரூடமும் உண்மையாகவில்லை. என் தந்தையின் மீது ஆணையாகக் கூறுகிறேன், குமாரசாமி முதல்வராக முடியாது என்றிருந்தாா். குமாரசாமி முதல்வராகவில்லையா? பிரதமா் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்று கூறியிருந்தாா். பிரதமா் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமையவில்லையா? சித்தராமையா கூறிய எதுவும் உண்மையாகவில்லை என்பதால், இடைத்தோ்தலில் 12 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறுமென்பதும் நடக்கப் போவதில்லை. கூட்டணி அரசு இருந்த காலத்தில் குமாரசாமி மனம்நொந்து சித்தராமையாவை விமா்சித்திருந்தாா். இப்போது காங்கிரசும் மஜதவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போகின்றன என்று சொன்னால், அது நடந்துவிடுமா?

கா்நாடக மக்களின் கவனத்தை திசை மாற்றுவதற்காக காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமென்று கூறிவருகிறாா்கள். இவற்றைப் புரிந்துள்ள மக்கள் மஜத மற்றும் காங்கிரசின் சதிக்கு இணங்க மாட்டாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com