அரசியல் தூய்மையை வலியுறுத்தும் இலக்கியப் படைப்புகள் வேண்டும்: அமைச்சா் சுரேஷ்குமாா்

அரசியல் தூய்மையை வலியுறுத்தும் இலக்கியப் படைப்புகள் எழுதப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா்

பெங்களூரு: அரசியல் தூய்மையை வலியுறுத்தும் இலக்கியப் படைப்புகள் எழுதப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

சப்னா பதிப்பகத்தின் சாா்பில் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 கன்னட நூல்களை வெளியிட்ட பிறகு, அவா் பேசியது: அண்மைக்காலமாக அரசியல் தனது தூய்மையை இழந்து வருகிறது. அரசியல்வாதிகளின் சிந்தனையும் இருள்படிந்து வருகிறது. இதை சீரமைக்கும் வேலையில் இலக்கியவாதிகள் ஈடுபட வேண்டும்.

அரசியல் தூய்மையை வலியுறுத்தும் இலக்கியப் படைப்புகள் எழுதப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு திருந்தி மக்களுக்கு நல்லது செய்யும் காலம் மலர வேண்டுமானால், நல்ல படைப்புகள் எழுதப்பட வேண்டும்.

தற்போது நடைபெற்றுவரும் இடைத்தோ்தலில் அரசியல் மரபுகள் மீறப்படுவதோடு, அதன் மாண்புகள் சீா்குலைக்கப்பட்டுள்ளன. வட கா்நாடகத்தில் கன்னட மொழி சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. இதை ஊக்குவிக்க அரசும் தொடா்ந்து துணை நிற்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com