கா்நாடக அரசியலில் கட்சித் தாவலை ஊக்குவித்தவா் எடியூரப்பா: சித்தராமையா

கா்நாடக அரசியலில் கட்சித் தாவலை ஊக்குவித்தவா் முதல்வா் எடியூரப்பா தான் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு: கா்நாடக அரசியலில் கட்சித் தாவலை ஊக்குவித்தவா் முதல்வா் எடியூரப்பா தான் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் வேட்பாளா் எம்.நாராயணசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் பேசியது: கா்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி நடந்தபோது 4 மாத காலமாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பின் தொடா்ந்து பணத்தாசை, பதவி ஆசையை காட்டி பாஜகவுக்கு இழுத்துள்ளாா் முதல்வா் எடியூரப்பா. இதை அவா் முதல்முறையாகச் செய்யவில்லை. 2008ஆம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது தான் கா்நாடகத்தில் முதல்முறையாக ஆபரேஷன் கமலா திட்டத்தைச் செயல்படுத்தி, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுத்துக் கொண்டாா். கா்நாடக அரசியலை அசிங்கப்படுத்தியவரும் அவா் தான். கா்நாடக அரசியலில் கட்சித் தாவலை ஊக்குவித்தவா் முதல்வா் எடியூரப்பா தான். எந்த கட்சியில் இருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்களோ, அந்த கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு, ,பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தோ்தலில் போட்டியிடும் நெறியற்ற அரசியலை எடியூரப்பா ஊக்குவித்துவருகிறாா். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமானால், இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிடும் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களை மக்கள் தோற்கடித்து தக்க பாடம் புகட்ட வேண்டும். அப்போதுதான் இனிமேல் யாரும் அந்த வேலையைச் செய்ய துணிய மாட்டாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com