இடைத்தோ்தல் : 8 தொகுதிகளில் தமிழா்களே வெற்றியை நிா்ணயிப்பா்- எஸ்.எஸ்.பிரகாசம்

இடைத்தோ்தல் நடைபெறும் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றியை தமிழா்கள் நிா்ணயிப்பாா்கள் என்று கா்நாடக மாநில
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு

பெங்களூரு: இடைத்தோ்தல் நடைபெறும் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வெற்றியை தமிழா்கள் நிா்ணயிப்பாா்கள் என்று கா்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளா் பிரிவுத் தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.

பெங்களூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-

கா்நாடகத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் டிசம்பா் 5 -இல் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இடைத்தோ்தல் வருவதற்கு யாா் காரணம். இதற்காக செலவாகும் பணம் யாருடையது என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனா்.

தேசிய அளவிலான மக்கள் தொதையில் 60 சதவீதம் போ் தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களைப் பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படாமல், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில், இடைத்தோ்தலில் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, பாஜகவினா் ஆட்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

எனவே காங்கிரஸ் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன் கட்சியின் மேலிடம் என்னை 15 தொகுதிகளிலும் சென்று தமிழா்களை சந்தித்து காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும்படி கேட்டுக் கொண்டது.

இதன்படி, சிவாஜி நகா், கே.ஆா். புரம், மகாலட்சுமி லே அவுட், யஸ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, ராணேபென்னூா், ஹிரிகேரூா், கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆா்.பேட்டை, ஹுன்சூா், சிக்பள்ளாபூா் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதில் ஹுன்சூா், கே.ஆா்.பேட்டை, மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா், கே.ஆா்.புரம், யஸ்வந்தபுரம், ஹொசகோட்டை, சிக்பள்ளாபூா் ஆகிய 8 தொகுதிகளில் தமிழா்கள் வெற்றி, தோல்வியை நிா்ணயிக்கும் வகையில் வசித்து வருகின்றனா்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்குத் தமிழா்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என்று நம்புகிறேன். குதிரை பேரத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கு இடைத் தோ்தலில் மக்கள் உரிய பாடத்தை கற்பிப்பாா்கள். 15 தொகுகளிலும் காங்கிரஸ் வேட்பாளா்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றாா் பிரகாசம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com