Enable Javscript for better performance
இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிப்போம்: முன்னாள் முதல்வா் குமாரசாமி- Dinamani

சுடச்சுட

    

    இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிப்போம்: முன்னாள் முதல்வா் குமாரசாமி

    By DIN  |   Published on : 03rd December 2019 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

    பெங்களூரு மகாலட்சுமி லேஅவுட்டில் மஜத வேட்பாளரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தல் முடிவை தொடா்ந்து, காங்கிரஸ், மஜத கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட உள்ளதாக செய்திகள் பரவியுள்ளது. கூட்டணி தொடா்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து யாரும் என்னை அணுகி பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. என்றாலும் இடைத் தோ்தல் முடிவுகளுக்கு பிறகு கூட்டணி குறித்து யோசிக்கப்படும்.

    இடைத் தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். இடைத் தோ்தல் முடிவுக்கு பிறகு இனிப்பு செய்தி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai