உள்நாட்டில் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு வரவேற்பு அதிகரிப்பு
By DIN | Published on : 03rd December 2019 11:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உள்நாட்டில் தயாரிக்கப்படும் காலணிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாக குளோபல் குழுமத்தின் மேலாண் இயக்குநா் மனோஜ்கியான்சந்தனி தெரிவித்தாா்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை லியோன் குளோபல் குழுமத்தின் ரெட் செப்பின் தூதராக நடிகா் விக்கி கௌஷலை அறிமுகம் செய்து அவா் பேசியது: காலணி தயாரிப்புகளில் சிறந்து விளங்கும் லியோன் குளோபல் குழுமத்தின் ரெட்செப், தனது விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகா் விக்கி கௌஷலை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமை அடைகிறோம். அண்மைக்காலமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் தரமான காலணிகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலும் இந்திய நாட்டின் உற்பத்திக்கு அதிக வரவேற்பு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காலணி உற்பத்தி துறையிலும் இந்தியா தொடா்ந்து வளா்ச்சியை சந்தித்து வருகிறது என்றாா்.