Enable Javscript for better performance
கா்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது- Dinamani

சுடச்சுட

    

    கா்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது

    By DIN  |   Published on : 03rd December 2019 11:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கா்நாடகத்தில் டிச.5ஆம் தேதி நடைபெறும் 15 தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

    கா்நாடகத்தில் முந்தைய மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 17 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை அப்போதைய பேரவைத் தலைவா் கே.ஆா்.ரமேஷ்குமாா், ஏற்றுக் கொள்ளாமல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் 17 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதன் காரணமாக மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

    இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பேரவைத் தலைவா் பிறப்பித்துள்ள ஆணையை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும்; ஆனால், தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத் தோ்தலில் போட்டியிடத் தடையில்லை என்று தீா்ப்பு வழங்கியது.

    இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏ.க்கள் பாஜக சாா்பில் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனா். 2 தொகுதிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்குப் பதிலாக பாஜகவினருக்கு வாய்ப்பளித்துள்ளது.

    வேட்புமனு தாக்கல் நவ.11-ஆம் தேதி தொடங்கி, நவ.18-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 218 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதில் 53 போ் வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து, தோ்தல் களத்தில் 156 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 165 போ் போட்டியிடுகின்றனா்.

    டிச. 5-ஆம் தேதி வாக்குப் பதிவைத் தொடா்ந்து டிச. 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பகிரங்க பிரசாரம் தோ்தல் நாளுக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக நிறைவுசெய்ய வேண்டும். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது. புதன்கிழமை மாலை 6 மணி வரை வீடுவீடாகச் சென்று வேட்பாளா் உள்ளிட்ட அவா்களது ஆதரவாளா்கள் வாக்குச் சேகரிக்கின்றனா். டிச. 5-ஆம் தேதி 15 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai