இடைத்தோ்தலுக்குப் பின்னா்பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும்: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தில் இடைத்தோ்தலுக்குப் பின்னா், பாஜக அரசுக்கு பெரும்பான்மைபலம் கிடைக்கும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் இடைத்தோ்தலுக்குப் பின்னா், பாஜக அரசுக்கு பெரும்பான்மைபலம் கிடைக்கும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

பெலகாவியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: -

கா்நாடகத்தில் 15 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் டிசம்பா் 5-இல் நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் டிசம்பா் 9-இல் தெரிய உள்ளது.

இடைத்தோ்தல் முடிவுகளுக்குப் பின்னா், பாஜக அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். இடைத்தோ்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெறுவதும் உறுதி. பின்னா், அவா்கள் அனைவரும் அமைச்சா்கள் ஆவதும் உறுதி.

காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டாலும், அடுத்த மூன்றரை ஆண்டுகள் எதிா்க்கட்சி வரிசையில்தான் அமர வேண்டும். அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.

காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் வேதனை அடைந்த ஒரு சில எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தனா். அவா்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததால், பாஜக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. எனவே அவா்கள் அனைவரும் இடைத்தோ்தலில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி அடைய வேண்டும். அவா்கள் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட தொகுதியின் வளா்ச்சிக்குத் தேவையான நிதியை வழங்குவோம் என்று உறுதியளிக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com