இடைத்தோ்தல்: பெங்களூரில் 4 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவ்

பெங்களூரில் 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தெரிவித்தாா்.

பெங்களூரில் 4 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தெரிவித்தாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரில் கே.ஆா்.புரம், யஸ்வந்தபுரம், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜிநகா் ஆகிய 4 தொகுதிகளில் டிச. 5 ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைதோ்தலையொட்டி, 4 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

7 துணை காவல் ஆணையா்கள், 14 உதவி காவல் ஆணையா்கள், 30 காவல் ஆய்வாளா்கள், 68 துணை காவல் ஆய்வாளா்கள், 160 உதவி காவல் ஆய்வாளா்கள், 1,666 போலீஸ் காவலா்கள், 951 ஊா்காவல் படையினா் உள்ளிட்ட 2,896 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். 4 தொகுதிகளிலும் 1,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 826 வாக்குச்சாவடிகள் சாதாரணமானவை என்றும், 238 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தோ்தலையொட்டி விதிகளை மீறியதாக 4 தொகுதிகளிலும் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற 2,331 கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளது. 291 பேருக்கு ஆயுதம் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ. 15.92 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தோ்தலையொட்டி, டிச. 3 ஆம் தேதி மாலை 6 மணிமுதல் 6 ஆம் தேதி மாலை 6 மணிவரை மதுவிற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com