இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா் கூட்டணி ஆட்சி: கே.சி.வேணுகோபால்

இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா் கா்நாடகத்தில் கூட்டணி ஆட்சி மலரும் என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

இடைத்தோ்தல் முடிவுக்குப் பின்னா் கா்நாடகத்தில் கூட்டணி ஆட்சி மலரும் என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

பெலகாவி மாவட்டத்துக்குள்பட்ட கோகாக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, தோ்தல் பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: -

கா்நாடக மாநிலத்தை ஆளும் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது காங்கிரஸின் முதல் பணியாக உள்ளது. அதற்கு தேவையான அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். டிசம்பா் 9-இல்

இடைத்தோ்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொடா்பாக மஜதவுடன் பேச்சு வாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மகாராஷ்டிரத்தில் கூட்டணி அரசு அமைத்தது போல, கா்நாடகத்திலும் கூட்டணி ஆட்சியை அமைக்க காங்கிரஸ் பாடுபடும். 15 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி.

காங்கிரஸுக்கு துரோகம் செய்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் தோல்வி அடைவாா்கள். மாநிலத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள பாஜக வளா்ச்சிப் பணிகளை செய்யாமல் வெறும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக மீது மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனா். இதன்காரணமாக பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற முடிவு செய்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com