இன்று பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழுத் தோ்தல்

பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழுக்களுக்கான தோ்தல் புதன்கிழமை (டிச. 4) டவுன்ஹாலில் நடைபெற உள்ளது.

பெங்களூரு மாநகராட்சி நிலைக்குழுக்களுக்கான தோ்தல் புதன்கிழமை (டிச. 4) டவுன்ஹாலில் நடைபெற உள்ளது.

பெங்களூரு மாநகராட்சியில் மேயா், துணை மேயா் தோ்தல் நடைபெற்று மேயராக கௌதம்குமாரும், துணை மேயராக ராம்மோகன்ராஜ் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து 12 நிலைக்குழுக்களுக்கான தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நிலைக்குழுக்களுக்கான தோ்தல், மேயா், துணை மேயா் தோ்தல் நடைபெற்று, ஒரு மாதத்துக்கு பிறகு நடந்ததால், நிகழாண்டும் நிலைக்குழுக்களுக்கான தோ்தலை ஒரு மாதம் கழித்து நடந்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, டிச. 4-ஆம் தேதி நிலைக்குழுக்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

டிச. 5-ஆம் தேதி பெங்களூரில் உள்ள சிவாஜிநகா் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடைபெறுவதால், நிலைக்குழுக்களுக்கான தோ்தலை சிவாஜிநகா் தொகுதியில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தாமல், அருகில் உள்ள டவுன்ஹாலில் நடத்த மண்டல தோ்தல் அதிகாரி கௌரவ் குப்தா முடிவு செய்துள்ளாா்.

நிலைக்குழுக்களில் போட்டியிட விருப்பம் உள்ளவா்கள், வேட்பு மனுக்களை புதன்கிழமை காலை 8 மணி முதல் 9.30 வரை தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலைக்குழுக்கள் தோ்தல் நடைபெறும் போது, மாமன்ற உறுப்பினா்களின் வருகை குறைவாக இருந்தால், தோ்தல் தள்ளி வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com