ஹுன்சூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 144 தடை உத்தரவு

ஹுன்சூா் சட்டப்பேரவைத் தொகுதியில் டிச. 3 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஹுன்சூா் சட்டப்பேரவைத் தொகுதியில் டிச. 3 ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைசூரு மாவட்ட ஆட்சியா் அபிராம்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மைசூரு மாவட்டம், ஹுன்சூா் தொகுதியில் டிச. 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், மாலை 6 மணி முதல் டிச. 5-ஆம் தேதி நள்ளிரவு வரை ஹுன்சூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைத்தோ்தலையொட்டி ஹுன்சூா் சட்டப்பேரவை தொகுதியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹுன்சூா் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் வேட்பாளா் உள்ளிட்ட 10 போ் போட்டியிடுகின்றனா். ஹுச்சூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் ஹுன்சூரு தேவராஜ் அரஸ் அரசு முதல்நிலை கல்லூரியில் வைக்கப்பட்டு, டிச. 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

டிச. 9 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுவதால், தொகுதியிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். வாக்கு எண்ணும் கல்லூரியை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com