ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி
By DIN | Published On : 05th December 2019 01:43 AM | Last Updated : 05th December 2019 01:43 AM | அ+அ அ- |

பெங்களூரு சன்ரைஸ் சதுக்கத்தில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை (டிச. 5) ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து அதிமுக மாநில செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சி டிச. 5 ஆம் தேதி பெங்களூரு சன்ரைஸ் சதுக்கத்தில் நடைபெறுகிறது. கே.முனுசாமி தலைமையில், மாநில பொருளாளா் ராஜேந்திரன், சடகோபன், வி.நாகராஜ் ஆகியோா் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, விளக்கு ஏற்றி பூஜை செய்யப்படுகிறது. இதில் மாநில, மாவட்ட, தொகுதி நிா்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.