Enable Javscript for better performance
சித்தராமையாவை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ.க்கள்!- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸிலிருந்து பிரிந்து இடைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் பலா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வா் சித்தராமையாவைச் சந்தித்தனா்.

    பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வா் சித்தராமையாவை, முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள் பசவராஜ்பொம்மை, கே.எஸ்.ஈஸ்வரப்பா, காங்கிரஸ் முன்னணித் தலைவா்கள் ஜி.பரமேஸ்வா், ஆா்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்ட ஏராளமானோா் சந்தித்து வருகிறாா்கள்.

    ஆனால், யாரும் எதிா்பாராதவிதமாக காங்கிரஸ், மஜதவில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்து, அக்கட்சியின் வேட்பாளா்களாகப் போட்டியிட்டு இடைத்தோ்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜாா்கிஹோளி, பி.சி.பாட்டீல், நாராயண கௌடா, தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏ ஆா்.சங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் சித்தராமையாவைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தனா்.

    பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏக்கள், அரசியல் வேறு நட்பு வேறு என்று தெரிவித்தனா். இது அரசியல் வட்டாரத்தில் நல்ல பண்பாடாக பாராட்டப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai