Enable Javscript for better performance
டிச.16-இல் கல்வித் துறை அமைச்சருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    டிச.16-இல் கல்வித் துறை அமைச்சருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 14th December 2019 09:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டிச.16-ஆம் தேதி கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாருடன் பொதுமக்கள் தொலைபேசி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநில கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமான குறைகளை கேட்டறிவதற்காக பெங்களூரில் இருந்து பொதுமக்களுடன் தொலைபேசி வழியாக உரையாடல் நடத்த கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் திட்டமிட்டுள்ளாா். பெங்களூரு, பனசங்கரி பகுதியில் உள்ள டிஎஸ்இஆா்டி வளாகத்தில் டிச.16-ஆம் தேதி மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்களின் வினாக்களுக்கு அமைச்சா் சுரேஷ்குமாா் பதிலளிக்கிறாா்.

    அமைச்சருடன் பேசுவதற்கு பொதுமக்கள் 080-26725654, 26725655 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai