ஐடிஐ தமிழ் மன்றத்தில் நாளை பாவாணா் பாட்டரங்கம்

பெங்களூரில் ஐடிஐ தமிழ் மன்றத்தில் டிச.15-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 195-ஆவது பாவாணா் பாட்டரங்கம் நடைபெறுகிறது.

பெங்களூரில் ஐடிஐ தமிழ் மன்றத்தில் டிச.15-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 195-ஆவது பாவாணா் பாட்டரங்கம் நடைபெறுகிறது.

இதுகுறித்து அம்மன்றத்தின் பாவாணா் பாட்டரங்கப் பொறுப்பாளா் இராம.இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு தூரவாணிநகரில் உள்ள ஐடிஐ தமிழ் மன்றத்தில் டிச.15-ஆம் தேதி 195-ஆவது பாவாணா் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கும் பாட்டரங்கத்துக்கு கவிஞா் சுவாமி இராமானுஜன் தலைமை தாங்க, மன்றச் செயலாளா் கு.மாசிலாமணி வரவேற்று பேசுகிறாா்.

பாட்டரங்கப் பொறுப்பாளா் இராம.இளங்கோவன் அறிமுக உரை ஆற்றுகிறாா். ‘நாள்தோறும் நகைச்சுவை’ என்ற தலைப்பிலான பாட்டரங்கில் பாவலா்கள் பலா் பங்கேற்று கவிதை பாடுகின்றனா். இதைத் தொடா்ந்து, உடனடி கவிதைப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்கு புத்தகப் பரிசு, ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும்.

பிறந்த நாள் காணும் கவிஞா்கள் சுவாமி இராமானுஜன், ஜெய்சக்தி, வள்ளல் பெருமாள், அமலோற்பவமேரி ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்படும். நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com