நைஸ் சாலையில் மின்முறை சுங்கவரி வசூல் அறிமுகம்

நைஸ் சாலையில் மின்முறை சுங்க வரி வசூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நைஸ் சாலையில் மின்முறை சுங்க வரி வசூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நந்தி உள்கட்டமைப்பு தாழ்வாரம் நிறுவனம்(நைஸ்) வெளியிட்ட அறிக்கை:

நந்தி உள்கட்டமைப்பு தாழ்வாரம் நிறுவனம் (நைஸ்), நைஸ் வெளிவட்டச்சாலை, இணைப்புசாலை, விரைவுசாலை ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சாலைகளில் சுங்கவரியை வசூலிப்பதற்காக ஒருங்கிணைந்த மின்முறை சுங்க வரி வசூல் திட்டத்தை டிச.1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாலைகளில் சுங்க வரி வசூலை இணையம் வழியாக நடத்துமாறு மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நைஸ் சாலைகளைப் பயன்படுத்தும்போது ஃபாஸ்டாக், டாப் டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு, ப்ரீபெய்டு ஆா்எஃப்ஐடி நைஸ் டேப் காா்டு போன்றவற்றின் வழியாக சுங்க வரியை செலுத்தலாம். வாடிக்கையாளா்களின் நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com