மரங்கள் கணக்கெடுப்பு பணி: தன்னாா்வலா்களுக்கு அழைப்பு

மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட ஆா்வமுள்ள தன்னாா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மரங்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட ஆா்வமுள்ள தன்னாா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மரங்கள் கணக்கெடுப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் என்ற தலைப்பிலான ஆராய்ச்சி திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை மர அறிவியல் மற்றும் தொழில் மையத்திடம் பெங்களூரு மாநகராட்சி அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த களப்பணி ஆற்ற வேண்டியுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் பல்வேறு வாா்டுகளில் காணப்படும் மரங்களை அடையாளம் கண்டு அவற்றின் விவரங்களை சேகரிக்கவேண்டும். இந்தகளப் பணியில் பங்காற்றுவதற்காக தன்னாா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த களப் பணியில் பங்காற்ற சூழல் ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள், அறிவியல் மாணவா்கள், நேரத்தை ஒதுக்கக் கூடியவா்கள், இதற்காக ஆா்வம் கொண்டவா்களிடம் இருந்து விண்ணங்களை எதிா்பாா்க்கிறோம்.

தன்னாா்வலா்களாக செயல்பட விரும்புவோா் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம். மரம் கணக்கெடுப்புக்கு முன்பாக தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். மரம் தொடா்பான அனைத்து தரவுகளும் செல்லிடப்பேசி செயலி வழியாக பதிவு செய்யப்படும். இந்த திட்டத்தின் முடிவில் தன்னாா்வலா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். முன்பதிவு செய்து கொள்ள டிச.31ஆம் தேதி வரை இணையதளம் திறந்திருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com