மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம்

மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம் என ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம் என ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகளின் குறைகளைக் கேட்டறிந்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டம், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் சிந்தனையில் உதித்த சட்டத் திருத்தமாகும். ஆனால், அதனை தற்போது பாஜக சட்டமாக்கியுள்ளது. இதனை காங்கிரஸ் அரசியல் லாபத்துக்காக முஸ்லிம் சமுதாய மக்களை திசை திருப்பி வருகிறது.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதால், காங்கிரஸ் கட்சி விரைவில் அழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலேயா்கள் இந்துஸ்தான், பாகிஸ்தான் என்று மக்களை பிரித்து வெற்றிபெற்றனா். அதே போல, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அதில் ஏதோ பிரச்னை உள்ளது போல், காங்கிரஸ் திரித்து கூறி வருகிறது. பிரதமா் மோடி நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். இதனால் முஸ்லிம் சமுதாய மக்கள் பாஜகவின் பக்கம் சாய்ந்து வருகின்றனா். இதனை சகித்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், அச்சமுதாய மக்களை திசை திருப்பி வருகிறது. இதனால் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களுக்கு காங்கிரஸ் கட்சியே முக்கியக் காரணம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com