Enable Javscript for better performance
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம்: அறநிலையத் துறையினர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம்:  அறநிலையத் துறையினர் ஆய்வு

    By DIN  |   Published on : 01st February 2019 04:19 AM  |   அ+அ அ-   |    |  


    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்  அர்ச்சகர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோயில் கருவறையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
     நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி காலை கோயிலில் சுவாமிக்கு அலங்காரப் பணி நடைபெற்றபோது,  8 அடி உயரத்தில் உள்ள பலகையின் மீது நின்றபடி சுவாமிக்கு மாலை அணிவித்த அர்ச்சகர் வெங்கடேசன்(53) என்பவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்.  இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், அவர் கீழே விழும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால்,  பக்தர்களை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
    இதையடுத்து, அர்ச்சகர்கள் பாதுகாப்பாக நின்று சுவாமிக்கு அலங்கார பணியை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 
     இதையடுத்து,  பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் வரதராஜன்,  கோயில்  உதவி ஆணையர் பெ. ரமேஷ்,  கோட்டப் பொறியாளர் வெற்றிவேல், தமிழ்நாடு காகித ஆலையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர், தனியார் லிப்ட் நிறுவனத்தினர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    இதுகுறித்து பெ.ரமேஷ் கூறியது:-  அர்ச்சகர்கள் பாதுகாப்பாக பணி மேற்கொள்ள கருவறையில் லிப்ட் வசதி செய்ய திட்டமிடப்பட்டது. எனினும் லிப்ட் அமைக்க வேண்டும் எனில் கருவறையில் பள்ளம் தோண்ட வேண்டும். இது கோயில் கருவறை விதிமுறைகளுக்கு அப்பாற்றப்பட்டது. தவிர பால் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யும்போது அவை லிப்டில் பட்டு பழுடையும். எனவே லிப்ட் அமைக்க வேண்டாம் என குழுவில் இருந்த அர்ச்சகர்கள் கருத்து தெரிவித்தனர். எனவே லிப்ட் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 
    இதற்கு மாற்றாக மார்பளவு உள்ள பலகையை அகலப்படுத்துதல் அதைச்சுற்றி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் பாதுகாப்பு வேலி(கைப்பிடி)அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுபோல் சுவாமியின் அருகே மற்ற இடங்களிலும் கைப்பிடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையரிடம் வழங்கப்படும். அவர் ஒப்புதல் அளித்த பின்னரே கைப்பிடி அமைக்கப்படும். இதன்மதிப்பும் ஆணையரின் ஒப்புதலுக்குப் பின்னரே தெரியவரும் என்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp