எலக்ட்ரானிக் சிட்டியில் இன்று பொங்கல் விழா

 பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பிப்.2-ஆம் தேதி பொங்கல் விழா நடத்தப்படுகிறது.


 பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பிப்.2-ஆம் தேதி பொங்கல் விழா நடத்தப்படுகிறது.
இதுகுறித்து சலார்புரியா சிம்போனி அடுக்குமாடிக் குடியிருப்போர் தமிழ்மன்றம் வெளியிட்ட அறிக்கை:
சலார்புரியா சிம்போனி அடுக்குமாடிக் குடியிருப்போர் தமிழ் மன்றத்தின் சார்பில் பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டியில் ஹொசரோடு அருகேயுள்ள சந்திப்பில் அமைந்துள்ள சலாபுரியாசிம்போனி அடுக்குமாடி வளாகத்தில் பிப்.2,3-ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடக்கவிருக்கிறது. 
பிப்.2-ஆம் தேதி மாலை 6மணி அளவில் திண்டுக்கல் சக்தி கலை குழுவினரின் தமிழர்கலை நாட்டியநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குடியிருப்போர், குழந்தைகளின் கலைவிழா நடக்கிறது. இரவு 8மணிக்கு தென்னிந்திய மரபு உணவு வழங்கப்படுகிறது.
பிப்.3-ஆம் தேதி காலை 8 மணிக்கு கோபூஜை செய்து தவில் மற்றும் நாகசுரத்துடன் கூடிய மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9மணிக்கு தமிழர் மரபுப்படி சூரியனுக்கு படைக்க மண்பானையில் பொங்கல் பொங்கப்படுகிறது. காலை 10மணிக்கு பொங்கலை சூரியனுக்கு படைத்து கும்மி நடனம் நிகழ்த்தப்படுகிறது. 
காலை 11மணிக்கு குழந்தைகளுக்கு தமிழர் மரபு விளையாட்டுகள் நடக்கின்றன. நண்பகல் 12 மணிக்கு வாழை இலையில் தமிழர் மரபு உணவு அளிக்கப்படுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com