சுடச்சுட

  

  அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
  இதுகுறித்து கர்நாடக மாநில அறிவியல் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறிவியலறிஞர் சி.வி.ராமன் பிறந்த தினமான பிப். 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினவிழா நடத்தப்படுகிறது. அதை முன்னிட்டு "மக்களுக்காக அறிவியல், அறிவியலுக்காக மக்கள்' என்ற நோக்கத்துக்காக அதே தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
  இந்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்போரிடம் இருந்து ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கன்னடத்தில் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்போர் கட்டுரையுடன் பெயர், முழுமுகவரி, செல்லிடப்பேசி, மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களுடன் அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிபெறுவோருக்கு விருது, பட்டயம், சான்றிதழ் அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படும். கட்டுரைகளை பிப். 23-ஆம் தேதிக்குள் செயலாளர், கர்நாடக மாநில அறிவியல்பேரவை, அறிவியல் மையம், பனசங்கரி 2-ஆவது ஸ்டேஜ், பெங்களூரு-560070 என்ற முகவரி அல்லது krvp.info@
  gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 080-26718939 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai