சுடச்சுட

  

  கர்நாடக ஹிந்து நாடார் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   கர்நாடக ஹிந்து நாடார் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக்கூட்டம் சங்க நிறுவனர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சங்கத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்டுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சங்கச் செயலர் குருசாமி பேசுகையில், சங்கத்துக்கு விரைவாக கட்டடம் கட்ட நிலத்தை வாங்க முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று எடுத்துரைத்தார். சங்க துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், துணைச் செயலர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் பேசினர்.
   சங்க பொருளாளர் சித்தானந்தன், சங்கத்தின் மாதாந்திர வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார். சங்க துணைத் தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai