சுடச்சுட

  

  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது.
   பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் பிளாக் எண் 9-இல் பிரபல ரெüடிகள் சைக்கிள் ரவி, ஆட்டோ ராமு உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கைதிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து, மோதலில் ஈடுபட்ட கைதிகளை அமைதிப்படுத்தினர். பின்னர் தகராறில் ஈடுபட்ட 2 பிரிவினரையும் வெவ்வேறு பிளாக்குகளில் அடைத்தனர்.
   அதிகாரிகளின் தலையீட்டால் கைதிகளிடையே ஏற்பட்ட தகராறு உடனடியாகத் தடுக்கப்பட்டுள்ளது. தாமதித்திருந்தால், பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என சிறைத்துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai