சுடச்சுட

  

  15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை தடை செய்ய திட்டமிட்டுள்ளோம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா தெரிவித்தார்.
   பெங்களூரு டவுன்ஹாலில் திங்கள்கிழமை 30-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரவிழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது: பெங்களூரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, வாகன எண்ணிக்கையை குறைக்க பழமையான வாகனங்களை தடை வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை தடை செய்ய அரசு திட்டமிட்ப்பட்டுள்ளது. இதுகுறித்து வார்டு அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த
   வேண்டும்.
   மாநில அளவில் 7 கோடி மக்கள் தொகை உள்ளனர். இதில் பாதியளவு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் மக்கள் தொகை 1 கோடி பேர் உள்ளனர். வாகனங்களின் எண்ணிக்கையும் 1 கோடி உள்ளது. இதுமட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிகளவிலான வாகனங்கள் பெங்களூருக்கு வருகின்றன. இதனால் மாசும் அதிகரித்துள்ளது.
   மாசு அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால், உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டு 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது என்றார் அவர்.
   நிகழ்ச்சியில் மாநகரப் பேருந்துக் கழகத்தின் தலைவர் என்.ஏ.ஹாரீஸ், எம்.எல்.ஏ. உதய் கருடாச்சார், மாநகரப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பி.ஹரிசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai