கன்னட நூல்களை விற்க விண்ணப்பிக்கலாம்

கன்னட நூல்களை விற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கன்னட நூல்களை விற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்பதிப்பாக வெளியான புத்தகங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தின்கீழ், 2016-ஆம் ஆண்டுக்கான கன்னட நூல்களை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.kannadapustakapradhikara.com என்ற இணையதளத்தில் இருந்து பிப். 28-ஆம் தேதி வரை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுதவிர, பெங்களூரில் இருக்கும் ஆணையத்தின் அலுவலகம் அல்லது மாவட்டங்களில் உள்ள கன்னடம் மற்றும் கலாசாரத் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். இரண்டு படிநூல்களுடன் நிறைவுசெய்த விண்ணப்பப் படிவங்களை நிர்வாக அதிகாரி, கன்னட புத்தக ஆணையம், கன்னட மாளிகை, ஜே.சி.சாலை, பெங்களூரு-2 என்ற முகவரிக்கு பிப். 28-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்துசேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080 - 22484516, 22017704 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com