சுடச்சுட

  

  தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பிப்.14 மற்றும் 21-ஆம் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.
  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி கர்நாடகம் மாநிலம் ஹுப்பள்ளிக்கு வருகை புரிந்து பாஜக ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில், பிப். 14-ஆம் தேதி கர்நாடகம் வரும் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அன்று மாலை பல்லாரி மாவட்டம் ஹொசபேட்டையில் நடைபெறும் பாஜக மாநாட்டில் பங்கேற்கிறார்.
  அதைத் தொடர்ந்து பிப். 21-ஆம் தேதி சிக்பள்ளாபூரில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பெங்களூரு எலஹங்காவில் மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜக மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai