சுடச்சுட

  

  எம்.ஜி.ஆர் நலிவுற்றோர் நல அறக்கட்டளை முப்பெரும் விழா

  By DIN  |   Published on : 13th February 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உரிமைக்குரல் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நலிவுற்றோர் நல அறக்கட்டளை சார்பில் பிப். 24-ஆம் தேதி பெங்களூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
  இதுகுறித்து அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் ரவி வெளியிட்ட அறிக்கை:
   பெங்களூரு சிவாஜிநகர் வீரப்பிள்ளை தெருவில் உள்ள உரிமைக்குரல் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நலிவுற்றோர் நல அறக்கட்டளை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள், ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள், நலிவுற்றோர் நல அறக்கட்டளையின் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா, வரும் பிப். 24-ஆம் தேதி பெங்களூரு தமிழ்ச்சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. 
  முப்பெரும் விழாவுக்கு அறக்கட்டளை ஆலோசகர் வா.ஸ்ரீதரன், அறக்கட்டளைத் தலைவர் எம்.ஜி.ஆர் ரவி ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பி.சி.மோகன் எம்.பி, ஐசரி கணேஷ், நடிகைகள் வெண்ணிறாடை நிர்மலா, லதா, தி.கோ.தாமோதரன், துரை கண்ணன், அகண்டசீனிவாஸ் எம்.எல்.ஏ, முன்னாள் மாமன்ற உறுப்பினர் சரவணா, மாமன்ற உறுப்பினர் மம்தா சரவணன், சகில் அகமது, வசந்தகுமார், ஆனந்த்குமார், பைப்பனஹள்ளி ரமேஷ், மாநில அதிமுக செயலாளர் எம்.பி.யுவராஜ், எம்.ஜி.ஆர் மணி, எம்.கோபி, பி.எஸ்.சாஜி, எம்.ஏ.பழனி, ஜார்ஜ் மேத்யூ, முரளிகிருஷ்ணா, பாவலர் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai