சுடச்சுட

  

  பெங்களூரில் பிப். 17-ஆம் தேதி ஆற்காடு அன்பழகன் எழுதிய "மனிதனின் மனக்குமுறல்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
  இதுகுறித்து மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலம், பெங்களூரு எலஹங்கா திமுக கிளைச் செயலாளரும், மாநில திமுக பேச்சாளருமான ஆற்காடு அன்பழகன், திமுகவின் லட்சியம், நாட்டின் அரசியல் நடப்புகளையும், தமிழர் பண்பாட்டின் அகழ்வாராய்ச்சி குறித்த கருத்துகளையும் வலியுறுத்தி எழுதியுள்ள மனிதனின் மனக்குமுறல் என்ற நூல் வெளியீட்டு விழா, பிப். 17-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பெங்களூரு ராமசந்திரபுரத்தில் உள்ள கர்நாடக மாநில திமுக வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில் நடைபெற உள்ளது. 
  ஆற்காடு அன்பழகன் வரவேற்கிறார். மாநில திமுக அவைத்தலைவர் மு.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். முரசொலி கவிஞர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் நூலை வெளியிடுகிறார். பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் டி.சண்முகவேலன் முதல் பிரதியைப் பெறுகிறார். நிகழ்ச்சியில் வேப்பனஅள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். 
  இதில் மு.நடேசன், ஆர்.பாலாஜிசிங், இரா.வினோத், வெ.அரசு, வ.மலர்மன்னன் உள்ளிடோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். விழாவில் திமுக நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai