சுடச்சுட

    

    மகாலட்சுமி திருவிழா: கானாபூரில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு

    By DIN  |   Published on : 13th February 2019 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாலட்சுமி திருவிழாவையொட்டி கானாபூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: மஹாராஷ்டிர மாநிலம், கானாபூரில் மகாலட்சுமி திருவிழா நடைபெறுவதையொட்டி பிப். 15-ஆம் தேதி முதல் மார்ச் 5-ஆம் தேதி வரை பெங்களூரு-ஆஜ்மீர் வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16532),  ஆஜ்மீர்-பெங்களூரு வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16531), பெங்களூரு-பகத்கீ கோத்தி வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16534), பகத்கீ கோத்தி-பெங்களூரு வாராந்திர கரீப் நவாஸ் விரைவு ரயில்(16533), புணே-எர்ணாக்குளம் வாராந்திர பூர்ணா விரைவு ரயில் (11097), எர்ணாக்குளம் வாராந்திர பூர்ணா விரைவு ரயில் (11098), மங்களூரு-சத்ரபதி சாஹு மஹாராஜ் கோலாபூர் தினசரி விரைவு ரயில் (11303), சத்ரபதி சாஹு மஹாராஜ்கோலாபூர்-மங்களூரு தினசரி விரைவு ரயில் (11304) உள்ளிட்ட அனைத்து ரயில்களும் கானாபூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai