சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: சித்தராமையா

ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆடியோ விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஒப்படைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவையில் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், சித்தராமையா
பேசியது:
ஆடியோ உரையாடல் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைப்பதற்கு பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த அரசு மீதும், பேரவைத் தலைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த பேரவைத் தலைவரின் உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஒப்படைக்கும் முடிவை முதல்வர் குமாரசாமி கைவிடக் கூடாது.
இதில் அரசு தயக்கம் காட்டினால் பேரவைத் தலைவர், அரசு மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படும். காவல் துறை, சிபிஐ, சிறப்பு புலனாய்வுக் குழு என்பது மத்திய, மாநில அரசுகளின் அங்கமாக உள்ளது. என்பதற்காக அந்த அமைப்புகள் மீது சந்தேகம் எழுப்புவது முறையாகாது. 
அரசியல் சாசனம், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை எதிர்க்கமாட்டார்கள். எனவே உண்மையை வெளியே கொண்டு வர ஆடியோ உரையாடல் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவே விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com